Close
நவம்பர் 23, 2024 9:27 காலை

மருந்து நிறுவனம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரை விரட்டியடித்த கிராம மக்கள்

தெலங்கானா மாநிலம் விரகாபாத் மாவட்டம்  லகாச்சார் கிராமத்தில் மருந்து நிறுவனம் அமைக்க அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்   மருந்துத் தொழில் அமைப்பதற்காக மக்கள் கருத்து சேகரிப்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் நடத்தினர் .  இதில்  பங்கேற்க கலெக்டர் பிரதீக் ஜெயின், கோடங்கல்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்றனர்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் புறநகர்ப் பகுதிகளில் கருத்துகேட்பு நிகழ்ச்சி  நடத்தப்பட்டால், எந்த விவசாயிகளும் வரவில்லை.

இதையடுத்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் இருந்த பகுதிக்கு சென்றனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் கிராமத்திற்கு வந்ததும் விவசாயிகள் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர்.

இந்த கல்வீச்சில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.  சிலர்  அதிகாரிகளை தாக்கினர். இதில் அதிகாரி ஒருவர் கம்பால் தாக்கப்பட்டார்.  கலெக்டர் மீது பெண் ஒருவர் தக்கியதால் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து அதிகாரிகள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top