Close
நவம்பர் 24, 2024 12:22 காலை

எஸ்.பி உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? பேரி கார்டுகளை அகற்றியவர்களிடம் பெண் காவலர்கள் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழி இன்று இருசக்கர நான்கு சக்கர வாகன பாதைகள் பிரிக்கப்பட்ட நிலையில், தனியார் பட்டு சேலை விற்பனை நிறுவனம் பேரி கார்டுகளை அகற்றிய போது பெண் காவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்..

கோயில் நகரம் பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் வெளி மாநில மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இது மட்டும் இல்லாது திருமண நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பட்டு சேலைகள் வாங்க அதிக அளவில் கூடுவதால் பிரதான சாலையான காந்திசாலை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு புகார்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன பாதை நான்கு சக்கர வாகன பாதை என பிரிக்கப்பட்டு அதற்கான பேரிகாடுகள் வைக்கப்பட்டது.

இன்று சோதனை முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின் மாற்றங்கள் இருப்பின் செய்ய காவல்துறைக்கு எஸ்பி உத்தரவிட்டார். மேலும் வணிக நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் எஸ்பி வேண்டுகோள் விடுத்தார்.

பணிகளை முடித்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் என அனைவரும் சென்ற நிலையில், அதிகாலை 4 மணிக்கு காந்தி சாலையில் உள்ள பிரபல தனியார் பட்டுச்சேலை நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வருவதற்கு ஏற்பாடுகள் மற்றும் கயிறுகளை அவிழ்த்து அட்டூழியத்தில் ஈடுபட்டது.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் இது குறித்து புகார் தெரிவித்த நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பெண் காவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களை உடனடியாக அதனை மீண்டும் சரி செய்ய வேண்டும் எனவும் எஸ்பி உத்தரவை மதிக்க மாட்டீர்களா என கடுமையாக எச்சரித்தனர்

இதனையடுத்து  உடனடியாக ஊழியர்கள் அந்த இடத்தில் மீண்டும் தடுப்புகளை அமைத்தனர். மேலும் சிவ காஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஊழியர்களை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுபோன்று தவறு செய்யமாட்டோம் என தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து ஒரு நிலையில் தனியார் பட்டு சேலை நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top