உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, வட்டாட்சியருக்கான முதுநிலை பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிடாததை கண்டித்து துணை வட்டாட்சியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு 1(CSSE-I)-ன் மூலம் 196 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 2012-ஆம் ஆண்டு முதல் நேரடி நியமன வருவாய் உதவியாளராக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் பணியில் சேர்ந்து 2019-ஆம் ஆண்டு மாவட்ட பிரிவினை காரணமாக புதிய செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
வட்டாட்சியருக்கான முதுநிலை பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் , இது குறித்த வழக்கு தொடரப்பட்ட இருந்த நிலையில் அதற்கு மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை பின்பற்றி துணை வட்டாட்சியர் தெரிவு பட்டியல் வெளியிட்டு துணை வட்டாட்சியர் நிலையில் முதுநிலை நிர்ணயம் செய்திடவும். மேலும் அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கிடவும், கோரி மாண்பமை நீதிப்பேராணை தீர்ப்புரையில் சில குறிப்புகள் வழங்கபட்டது.
அதனை பின்பற்றி பொதுநிலை பட்டியலை வெளியிடக்கோரி பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று கூடிய காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு துணை வட்டாட்சியர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேச சந்திப்பு தங்கள் குறைகளை தெரிவித்ததின் பேரில் இன்று மாலைக்குள் இது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று மாலை பட்டியல் வெளியிடப்பட்டால் மட்டுமே கலைந்து செல்வோம் எனவும் இல்லையென்றால் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.