Close
நவம்பர் 14, 2024 4:38 மணி

நாமக்கல்லில் ஒரு நாள் முட்டை உற்பத்தி.. ஆனா ஒரு ‘டுவிஸ்ட்’

நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் முட்டை உற்பத்தியில் 95 சதவீத நாமக்கல் மாவட்டத்தில் தான் உற்பத்தியாகிறது. இதனால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு முட்டையின் எடை 52 முதல் 55 கிராம் வரை இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் தினசரி உற்பத்தியின் சராசரியாக 5.64 கோடி முட்டைகளை எட்டியிருந்த நிலையில், கடந்த பத்து மாதங்களில், நாமக்கல்லில் முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரியில் சராசரி தினசரி முட்டை உற்பத்தி 5.10 கோடி முட்டைகள் ஆகும். இந்த எண்ணிக்கை பிப்ரவரியில் 5.17 கோடியாகவும், மார்ச்சில் 5.22 கோடியாகவும், ஏப்ரலில் 5.31 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் 5.35 கோடி முட்டைகள் உற்பத்தி சீராக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 5.53 கோடியாகவும், செப்டம்பரில் 5.59 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் சராசரி தினசரி உற்பத்தி 5.60 கோடி முட்டைகளை எட்டியுள்ளது.
ஜனவரி மாதத்தை விட, அக்டோபர் மாதத்திற்குள், நாமக்கல்லில் நாளொன்றுக்கு, 50 லட்சம் முட்டைகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
உற்பத்தி அதிகரித்தாலும், கத்தார் நாட்டின் புதிய கொள்கையால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ஏனென்றால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து தான் வெளிநாட்டிற்கு 95 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் (டிஎன்பிஎப்ஏ) தலைவரும், நாமக்கல் என்இசிசி துணைத் தலைவர் கூறுகையில், பண்ணை விரிவாக்கம் மற்றும் புதிய கோழிப்பண்ணை வசதிகள் உற்பத்தி அதிகரிப்புக்கு காரணம். கத்தார் ஏற்றுமதி பிரச்சனைக்கு தீர்வுகாண மத்திய அரசு அதிகாரிகளை விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top