Close
டிசம்பர் 3, 2024 7:21 மணி

காஞ்சிபுரம் பகுதியில் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி பி எஸ் கே தெரு. இப்பகுதியில் மாநகராட்சியின் கழிவுநீர் உந்து அறை மற்றும் தனியார் பள்ளிகள், குடியிருப்புகள் என அமைந்துள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி கழிவுநீர் உந்து அறை அருகே சிறு பால பணிகளை காஞ்சிபுரம் மாநகராட்சி கடந்த மாதம் துவக்கியது.

பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்ல மாணவ மாணவிகள் சற்று சிரமப்பட்ட நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

திடீரென அப்பகுதி பணியில் தொய்வு ஏற்பட்டது. மண் கழிவுகளை அகற்றாமல் அப்படியே உள்ளதால் அப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து அவ்வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் என பலர் அவதியுற்று வருகின்றனர்.

எனவே உடனடியாக மண்கழிவுகளை அகற்றி இறுதி கட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் மேலும் தற்போது அவ்வப்போதும் மழை பெய்து வருவதால் அப்பகுதி சுற்றி நீர் தேங்கி சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் உடனடியாக மாநகராட்சி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top