Close
டிசம்பர் 3, 2024 6:15 மணி

உத்திரமேரூர் பகுதியில் தொடர் திருட்டு: அச்சத்தில் வாழும் மக்கள்

உத்திரமேரூர் காவல் நிலையம் (கோப்பு படம்)

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.போலீஸ் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். அதில் தற்போது எட்டு போலீசார் இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் உத்திரமேரூர் பகுதியில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதத்திற்குள் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆணைப்பள்ளம் பகுதியில் கணவரை இழந்து வசித்து வரும் மகாலட்சுமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் 7,000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவை திருடி சென்றன.

மேலும் குண்ணவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாண்டவாக்கம் கிராமத்தில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பல்சர் பைக்கை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற போது பல்சர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

மேலும், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே சமீபத்தில் கணவரை இழந்து டீக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணின் கடையில் கல்லாப் பெட்டியில் இருந்து சுமார் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பகலிலேயே மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அதேபோல், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறுங்கோழி கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவர் ஹீரோ ஹோண்டா பைக்கில் மனைவியுடன் உத்திரமேரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார்.

அவர்கள் கோவிலுக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து திரும்பி வரும்போது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இங்கு பணியாற்றும் போலீசார் பலரை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பினாலும், காவல் நிலைய போலீசார் பற்றாக்குறை காரணமாக போலீசார் ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட காவல்துறை உத்திரமேரூர் காவல் நிலையத்திற்குத் தேவையான காவல்துறை அதிகாரிகளை நியமித்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி குற்றச் சாட்டுகளைத் தடுக்கவும், காவல் நிலையத்திற்கு உரிய காவல் அலுவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top