Close
நவம்பர் 21, 2024 5:39 மணி

மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த குருவிமலை பள்ளியில் புனரமைப்பு பணி

மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த கட்டிடத்தில் புனரமப்பு பணி தொடங்கி உள்ளது.

குருவிமலை ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய பள்ளி மூன்று மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த நிலையில், தற்போது கட்டிடத்தை புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது..

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற நிலையில் பள்ளிக்கு கூடுதல் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் ரூ 61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் மூன்று வகுப்புகள் செயல்படும் வகையில் பள்ளி கட்டிடம் முடிக்கப்பட்டு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரால் திறக்கபட்டது.

கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்து நான்கு மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், காலை இறைவணக்க நேரத்திற்காக பள்ளி மாணவர்கள் வெளியே வந்த நேரத்தில் ஓர் வகுப்பறையின் மேல் கூரை பூச்சு விழுந்து மின்விசிறி உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தது.

நல்வாய்ப்பாக  இந்த விபத்திலிருந்து மாணவ மாணவிகள் ஆசிரியர் உட்பட அனைவரும் உயிர் தப்பித்தனர். இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி சிஐடியுவினர் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் மனு அளித்து முழுமையாக மீண்டும் பராமரித்து அதன் பின் திறக்கப்பட வேண்டும் என கூறினர்.

இதன் அடிப்படையில் ஆய்வு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் புதுப்பித்த பின் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என தெரிவித்து ஒப்பந்ததாரர் உள்ளிட்ட அனைவரிடம் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான பணிகளை துவக்குவதாக தெரிவித்தார்.

மீண்டும் மூன்று மாத காலம் கால தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து மீண்டும் புகார் தெரிவித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக புனரமைக்கும் பணியினை ஒப்பந்ததாரர் துவக்கி உள்ளார்.

கட்டிடத்தின் மேல் தள ஓடுகள் அனைத்தும் நீக்கப்பட்டும் வகுப்பறையின் மேற்கூரை பூச்சுகள் அனைத்தும் மீண்டும் அகற்றப்பட்டு முறையாக தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தலைமை ஆசிரியர் அறையில் பள்ளிகள் செயல்படுவதால் மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top