Close
நவம்பர் 21, 2024 6:55 மணி

10 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை..!

சாலை பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 8 புதிய தார்சலைகளை பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராமஜெயம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டகவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராககலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதிய 8 தார் சாலைகளை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது,

நான் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது, சாலை குண்டும் குழியுமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய சாலை அமைப்பதற்கு பிரதம மந்திரி மேம்பாட்டு நிதியின் கீழ் கண்ணபுரம் விழுப்புரம் சாலை முதல் காக்கப்பட்டி சாலை வரை ரூ 1.44 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படுகிறது.

அதே போல் எம் ஆர் எல் 48 தேசிய நெடுஞ்சாலை 60 முதல் கரிக்கலாம்பாடி வரை ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்படுகிறது.  வேட்டவலம் முதல் பொன்னாமேடு வரை ரூ 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. பெரிய ஓலைப்பாடி முதல் சின்ன ஓலைப்பாடி வரை ரூ 1.46 கோடி மதிப்பேட்டையில் சாலை அமைக்கப்படுகிறது. வயலூர் முதல் சாணிப்பூண்டி வரை ரூ 1.47 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ரமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top