Close
நவம்பர் 21, 2024 4:17 மணி

ஊராட்சி பள்ளிகளில் மாணவர்களோடு கற்றல்திறனை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியிலுள்ள உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து நகைச்சுவையாக உரையாடினார், இதில் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகள் வாகனம் பழுதடைந்தால் என்ன செய்வீர்கள் என மாவட்ட ஆட்சியர் கேட்டபோது வாகனத்தை தள்ளி கொண்டு செல்வோம் என நகைச்சுவையாக பதில் அளித்ததால் அனைவரையும் மத்தியில் சிரிப்பலையை உண்டாகியது

இதன் பின் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ/மாணவியர்களின் கற்றல் திறனை கேட்டறிந்து, பள்ளியிலுள்ள மத்திய உணவு கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,

உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டபோது தக்காளி சாதத்தில் , தக்காளியே இல்லாமல் எப்படி செய்தீர்கள் என அதிகாரிகளை கடித்துக் கொண்டபின் உணவின் தரத்தை உயர்த்தி வழங்குமாறு உத்தரவிட்டார்.

இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top