Close
நவம்பர் 15, 2024 1:51 காலை

திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டம்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதில் மருத்துவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட தை கண்டித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் புறநோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எல்லாம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top