Close
நவம்பர் 15, 2024 7:54 காலை

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி, ஆணையாளர் ஆய்வு

ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளரும், தமிழக வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையருமான ஜி.பிரகாஷ்  ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025 குறித்து வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் மற்றும் வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளர் ஜி.பிரகாஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தியத் தேர்தல் ஆ ணை யத்தி ன் அறிவுரையின்படி,    திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025-ஆனது 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெறவுள்ளது . அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 6.1.25 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்படவுள்ளது. வாக்காளர் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம் குறித்து ஆய்வு செய்திட தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச்செயலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் மற்றும் வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளர் ஜி.பிரகாஷ் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நிலை குறித்து அனைத்து வட்டாட்சியா்கள், கோட்டாட்சியா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், வாக்காளா் பதிவு அலுவலா்களான செய்யாறு சாா் – ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி)  மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) குமரன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top