Close
நவம்பர் 15, 2024 7:58 காலை

புதிய மேம்பால பணிக்கு பூமி பூஜை எம்பி எம்எல்ஏ பங்கேற்பு..!

மேம்பால பணிகளை துவக்கி வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் ரூ.25.90 கோடி மதீப்பீட்டிலான புதிய சாலைகள், மேம்பாலப் பணிகளை எம்.பி., எம். எல்.ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பகுதியில் சின்னையன்பேட்டை முதல் ஆத்திபாடி வரை ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, மலையனூர் செக்கடி முதல் பீமாராப்பட்டி வரை ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, தானிப்பாடி முதல் தா.வேலூர் வரை ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை,

தானிப்பாடி முனியப்பன் கோவில் ஆற்றுப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் மற்றும் பீமாராப்பட்டி பகுதியில் மலைவாழ் மக்களின் பல ஆண்டுகாலகோரிக்கையாக இருந்த பாம்பாறு குறுக்கே ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டி ல் புதிய மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.25 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேம்பால பணிகளை துவக்கி வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ

இந்த திட்டப்பணிகள் அனைத்தும் செயல்முறைபடுத்தப்பட்டு  திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் கலந்துகொண்டு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.  அப்போது புதிதாக அமைக்கப்படும் தார் சாலைகள் தரமாகவும் விரைவாகவும் முடிக்கவும்,  ஆற்றுப் பாலங்கள்  மழைக்காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்ள் பன்னீர்செல்வம் , இரமேஷ் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் . தனுசு , ஒன்றிய குழு தலைவர் பரிமளாகலையரசன், மாவட்ட கவுன்சிலர் முத்துமாறன்,  மாவட்ட பிரதிநிதி ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்.உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top