Close
நவம்பர் 15, 2024 3:36 மணி

கியூஆர் கோட் வந்த பின்னரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைகேடு

காஞசிபுரம் டாஸ்மாக் மதுபான கடை முன் வரிசையி் நின்ற மது பிரியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனையாகும் மது பாட்டிலுக்கான பில் வழங்கப்பட்ட நிலையிலும் முறைகேடுகள் நிறுத்தப்படவில்லை என மது பிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக்  மதுபான கடைகளில் இன்று முதல் விற்பனையாகும் மது பாட்டிலுக்கான விற்பனை பில் வழங்கப்படும் எனவும் அதற்கான பிரத்தியேக கியூஆர் கோடு பாட்டிலில் அமைக்கப்பட்டு அதை ஸ்கேன் செய்த பின் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே துவங்க இருந்த நிலையில் மதுபான கடைகளிலிருந்து பழைய சரக்குகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு தற்போது கியூ ஆர் கோட் பொருத்தப்பட்ட பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்ட நிலையில் விற்பனை இன்று 12 மணிக்கு துவங்கியது.

துவங்கிய சிறிது நேரம் மட்டுமே பில் போடும் பணி நடைபெற்று வந்ததாகவும் அதன் பின் பில் இல்லாமல் மது பாட்டில்கள் வழங்கி வருவதும் தெரிய வந்துள்ளது.

அதிக கூட்டம் காணப்படுவதால் ஸ்கேன் செய்யும் பணி தாமதம் உள்ளிட்டவைகளால் கூட்டத்தில் உள்ள நபர்கள் குரல் கொடுக்கும் சூழ்நிலையில் விற்பனை செய்வதாகும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பில்லிங் முறை குறித்து மது பிரியர்களிடம் கேட்டபோது, எத்தனை புதிய செயல்முறை திட்டங்கள் வந்தாலும் இவர்களின் முறைகேடு என்பது என்றைக்குமே நிற்காது எனவும் தற்போது பில் போடுவது 140 ரூபாய்க்கும் வாங்குவது 150 என  மது பிரியர்கள் குற்றம் சாட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top