Close
நவம்பர் 18, 2024 2:46 காலை

லாரியை மீட்டுத் தர காவல் நிலையம் முன்பாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்..!

குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர் பழனி

மாத வாடகைக்கு எடுத்துச் சென்ற லாரியை மீட்டுத் தர கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன்பு லாரி உரிமையாளர் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் பைனான்ஸ் வாங்கி சொந்தமாக லாரி எடுத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பழனி கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டு லாரி தொழில் செய்ய முடியாமல் இருந்துவந்தார்.

இந்தநிலையில் தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழனியிடம் லாரியை மாத வாடகைக்கு விடுமாறு கேட்டுள்ளார்..லாரிக்கு பைனான்ஸ் கட்ட முடியாமல் இருந்ததால் பழனி லாரியை ஒரு மாத வாடகைக்கு உதயக்குமாரிடம் ஒப்படைத்தார்.

லாரியை எடுத்துச் சென்ற உதயகுமார் முதல் மாதம் வாடகை கொடுத்துள்ளார். பின்னர் பழனி தன்னுடைய லாரியை திருப்பி தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டதற்கு உதயகுமார் தனக்கு இரண்டு மாத காலம் அவகாசம் தரும்படியும் அதற்கு உண்டான தொகையும் தருகிறேன் என்று கூறி வைத்துக்கொண்டார்.

5 மாத காலம் வரை பேசிய தொகையை கொடுத்துள்ளார். இதன் பின்னர் லாரியை ஒப்படைக்காமல் பேசிய தொகையை கொடுக்காமல்.காலம் தாழ்த்தி வந்துள்ளார். சந்தேகம் அடைந்த பழனி தன் லாரியை திருப்பி தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்.அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில்.லாரி உரிமையாளர் பழனி இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஒருகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இரு தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அந்தப் பேச்சுவார்த்தையில்10 நாட்களுக்குள் பேசிய தொகையும் லாரியையும் திருப்பி தந்து விடுவதாக உதயகுமார் தெரிவித்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தார். பின்னர் உதயகுமார் பேசியபடி தொகையையும் லாரியையும் திருப்பித் தராமல் அலைக்கழித்துள்ளார்.

இது குறித்து அடுத்தடுத்து பழனி தொடர்ந்து காவல் நிலையத்தில் கேட்ட போதெல்லாம் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 3.09.2024 அன்று உதயகுமார் மீது பழனி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் பழனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இரண்டாவது முறையும் புகார் அளித்தார். இந்த புகாரை பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதின் பெயரில் உதயகுமாரை நேற்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து மாலை விடுவித்துவிட்டதாகவும்

இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர் பழனி குடும்பத்துடன் அவர்கள் பலமுறை அளித்துள்ள புகார் மனுக்களை கையில் வைத்துக் கொண்டு காவல் நிலையம் முன்பு காலை முதல் மாலை வரை அற வழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பழனி தெரிவிக்கையில் தான் பைனான்ஸில் லாரி வாங்கி தொழில் செய்து வந்ததாகவும், தனக்கு ஏற்பட்ட விபத்து காரணத்தினால் லாரி பைனான்ஸ் கட்டுவதற்கு தனக்கு தெரிந்த நபர் கேட்டதால் லாரியை மாத வாடகைக்கு விட்டதாகவும் ஆனால் பேசிய தொகையையும், லாரியையும் திருப்பித் தராததால் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்,

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளித்ததாகவும் இதன் பெயரில் இன்று அவரை அழைத்து விசாரணை செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரை திருப்பி அனுப்பி விட்டதாகவும் லாரி பைனான்ஸ் கட்ட முடியாமல் கடன் தொல்லையில் சிக்கி தவிப்பதாகவும் உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்றும் தெரிவித்தார்.

லாரி உரிமையாளரையே ஏமாற்றி லாரியை வைத்திருக்கும் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத்தவிர வேறு வலி இல்லை என்று பரிதாபமாக கூறியது நெஞ்சத்தை என்னவோ செய்தது.

இதற்கு காவல்துறைதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top