Close
நவம்பர் 18, 2024 12:01 மணி

பெரியாண்டவா் கோயில் சீரமைப்புக்கு ரூ.1.57 லட்சத்து நிதி ஒதுக்கீடு

நிர்வாகிகளிடம் கோயில் சீரமைப்பு நிதியை வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெரியாண்டவா் கோயிலில் சீரமைப்புப் பணிக்காக ரூ.1.57 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கிராமப்புற நலிவடைந்த மற்றும் ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புளியரம்பாக்கம் பெரியாண்டவா் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்காக ரூ.1.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியை செய்யாறு  தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி கோயில் நிா்வாகிகளிடம்   வழங்கினாா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், செய்யாறு ஒன்றியச் செயலா்கள் ஞானவேல், ரவிக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் அமுதவல்லி உதயசூரியன்,  உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்யாற்றில் புதிய மேம்பாலங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் ரூபாய் 4.29 கோடியில் கட்டப்பட்ட இரு உயர்மட்ட பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நபார்டு திட்டத்தின் கீழ் செய்யாறு ஒன்றியம் மேல் நாகராம் பட்டு கிராமத்தில் ரூபாய் 2.19 கோடியில் புதியதாக உயர் மட்ட பாலமும் கொழையம்பாடி கிராமத்தில் ரூ.2.10 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

பணிகள் நிறைவுற்று தயார் நிலையில் இருந்த இரு பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரிஜா ,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,ஒன்றிய குழு தலைவர்கள் ,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top