சோழவத்தான் :
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம், மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர், பாலமேடு பேரூராட்சிகள் சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதிகளுடன் 244 வாக்குச் சாவடிகள் உள்ளது.
அந்த வாக்குச்சாவடிகளில், 16,17 தேதிகளில் வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான முகாம் 2 நாட்கள் நடந்தது. இந்த முகாமில், வாடிப்பட்டி கச்சைகட்டி,சோழவந்தான், பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
அப்போது, சோழவந்தானில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தி.மு.க அரசின் முதல்வர் மற்றும் கட்சி சின்னம் பொருத்திய வாக்காளர் சேர்க்கை படிவத்தினை தி.மு.கவினர் இணைக்கச் சொல்லி வலியுறுத்துவதாகவும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி, வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரனிடம், ஆர். பி. உதயகுமார் மனு கொடுத்தார்.
உடன் தேர்தல் துணை தாசில்தார் அல்காபுதீன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பையா, மாணிக்கம், பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா,கச்சைகட்டி மூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.