Close
நவம்பர் 18, 2024 5:33 மணி

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

இருவரை தாக்கிய உயிரிழக்க செய்த யானை தெய்வானை

தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணியசுவாமி திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா ,கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் மலேசியா, இலங்கை சிங்கப்பூர்உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து அலைகடலோரம் வீற்றிருந்து அருள் பாலிக்கும் செந்தூர் ஆண்டவனை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.

இதன் காரணமாக இக்கோவிலில் எப்போதுமே பக்தர்கள்  கூட்டம் அலைமோதியபடி தான் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா நிறைவடைந்து உள்ளது.

இக்கோவிலில் உள்ள தெய்வானை என்கிற யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் யானை தெய்வானை பாகன்  உதயகுமாரை (வயது46) அதற்கு வாழைப்பழம் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாகனின் உறவினரான சிசுபாலன்  ‘(வயது41) என்பவரை யானை தாக்கியது. இதனை தடுக்க முயன்றபோது பாகன் உதயகுமாரையும் தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.

யானை தாக்கியதில் பாகன் மற்றும் அவரது உறவினர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரண நடந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top