திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி முத்தழகன் தலைமை வகித்தார். செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் முருகன், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், பேரூராட்சி தலைவர் சுதா முருகன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாமணி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி , சேத்துப்பட்டு புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, டோமினிக் சேவியோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வரும் 451 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கடை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி தரணிவேந்தன் பேசுகையில், படிப்பு மட்டுமே இருந்தால் ஒருவர் சமுதாயத்தில் உயர்ந்து விட முடியாது. படிப்பை விட திறமையும் மிகவும் முக்கியம். மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு பண்போடு தனித் திறமையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கு படிக்கும் மாணவர்களை பார்த்தால் மிகவும் ஒழுக்கம் உள்ள மாணவர்களாக தெரிகிறது. மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகளாக வர வேண்டும். வேலைக்கு சென்ற பிறகு நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒன்றிய செயலாளர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.