Close
நவம்பர் 24, 2024 5:11 காலை

வந்தவாசியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

எம்பி மற்றும் எம்எல்ஏ உடன் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட் முகாமில் கலெக்டர் பாஸ்கார பாண்டியன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் ,வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர்ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் திட்ட முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், வந்தவாசியை அடுத்த கயநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து முன்மொழி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய குளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் காரனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் மாணவிகளின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி கற்றல் வாசித்தல் திறன்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தெளிவான உச்சரிப்புகளோடு எளிதில் புரியும் வகையில் பாடம் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான விளையாட்டு மைதானம் மற்றும் குடிநீர் வசதி இல்லை ஏற்படுத்திட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

வந்தவாசி நகரில் கோட்டை காலனி பகுதிக்கான சுடுகாட்டு பாதை உழவர் சந்தை பகுதியிலுள்ள சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு அறிவு சார் மையம் அமைப்பது, வந்தவாசி நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து மேல்மருவத்தூர் சாலை வரை மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வந்தவாசி வட்டம் வெண்குன்றம் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக உள்ளதா என்று குடிநீரை பருகி  ஆட்சியர், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் ,வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மணி, வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top