Close
நவம்பர் 21, 2024 9:49 காலை

மதுரையில் உஞ்சவிருத்தி பஜனை..!

உஞ்சவிருத்தி பஜனையின்போது தானம் செய்யும் பெண்

மதுரை:

மதுரை, சோழவந்தான் அக்ரஹாரம், தென்கரை அக்ரஹாரம் மற்றும் கொடிமங்கல அக்ரஹாரத்தில், ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ தர வேங்கடேச ஐயாவால் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது.

உஞ்சவிருத்தி என்றால் என்ன ?

சுமார் 45-50 ஆண்டுகளுக்கு முன்புவரையில் கிராமங்களில் சில குடும்பங்கள் உஞ்சவிருத்தி மட்டுமே செய்து தங்கள் வாழ்கையை நடத்தினர்

அதுசரி உஞ்சவிருத்தி என்றால் என்ன என்று சொன்னால் தானே மற்ற பல இளைய நண்பர்களுக்கும் புரியும்

பொதுவாக உஞ்சவிருத்தி என்பது இருவகைப்படும்

முதலாவது யாரிடமும் யாசகம் கேட்காமல் வயல்வெளிகளில் அறுவடை முடிந்ததும் அங்கு சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை பொருகிவந்து அரிசியாக்கி அதை கொண்டு தங்கள் ஜீவனத்தை நடத்தும் முறை ஒன்று

மற்றொன்று தலையில் வஸ்திரத்தால் தலைபாகை ஒன்றை கட்டிக்கொண்டு தோளில் ஒரு பித்தளை சொம்பை சிறு கயிறுகட்டி முன்பக்கம் லவாகமாக தொங்கவிட்டபடி ஒருகையில் சப்பலாகட்டையும் மறுகையில் தம்புராவும் மீட்டியபடி கிருஷ்ணா ராமா கோவிந்தா ஹரே ராம கிருஷ்ணா கோவிந்தா என்றபடி பகவத் நாமாவை வேறு சிந்தனையே இன்றி பஜனை செய்துகொண்டே தெருவில் செல்வது

அப்படி தெருவில் பகவத் நாமா பாடியபடியே செல்லும் அந்த பிராமணரை வீதியில் உள்ள இல்லங்களின் பெண்கள் தங்கள் இல்லத்தின் முன் நிறுத்தி அவரது பாதங்களைக்கழுவி அந்த அவரது உஞ்சவிருத்தி பாத்திரத்தில் தங்களால் இயன்ற அளவு தானியம்/ அரிசிமணியை இடுவர்.

அப்படி இடும் பெண்களை ஆசீர்வதித்து அவரது பாத்திரத்தில் இருந்து சிறிது தானியத்தை எடுத்து அந்த பெண்களின் பாத்திரத்தில் இடுவர் அதை அவர்கள் பகவத் பிரசாதமாக பெற்று செல்வர் அதை தங்கள் வீட்டு தானியத்தில் சேர்த்தால் அந்த தானியம் அட்சயம் அதாவது விருத்தி ஆகும் என நம்பினர்

இதுவே உஞ்சவிருத்தி என்னும் உன்னதமான முறை

உஞ்சவிருத்தி பொதுவாக சுத்த பிராமணராக வாழ்பவர்களே எடுப்பர் அப்படிபட்ட
உஞ்சவிருத்தி பிராமணர்கள் வேறு எந்த தொழிலோ வைதீக ப்ரோகித கர்மங்களிலோ ஈடுபடமாட்டார்கள் யாரிடமும் எக்காரணம் கொண்டும் எதற்காகவும் பணம் பொருள் யாசிக்கமாட்டர்கள்

தெருக்களில் எதேர்ச்சையாக நாமசங்கீர்த்தனம் செய்தவாறு செல்வர் தர்மம் செய்ய விருப்பட்டவர்கள் அவருக்கு அரிசி/ பொருள் இடுவர் அவ்வளவே

தர்மம் கொடு என்றும் அவர்கள் யாரிடமும் கேட்கமாட்டார்கள் அவர்களது அந்த உஞ்சவிருத்தி செம்பு பாத்திரம் நிரம்பியதும் தங்கள் இல்லம் திரும்புவர் அதிகமாகவும் பெறமாட்டார்கள்

அரசி கிடைக்கவில்லை என்றால் அன்றையநாள் முழுதும் குடும்பத்துடன் பட்டினி தான் / நீர் தான் அன்றய ஆகாரம்

அவர்களுக்கு தெரிந்து பகவானும் பகவான் நாம சந்கீர்தனமும் மட்டும்

ஏன் அவர்கள் உழைத்து உனக்கூடாது என்று கேட்கலாம்

பகவானின் வேதம் உண்மையான பார்பனர்களுக்கு விதித்துள்ள தர்மம் எவ்வித உடல் உழைப்பும் அல்ல

ஆசையுடையோர்கெல்லாம் வேதம் கற்பிக்கவும் தாங்களும் உரியவர்களிடம் கற்றுகொள்ளவும் யாசகம் செய்யவும் யாசகமாக பெற்ற பொருள் அதிகமாக இருந்தால் அதை பிற மனிதர்களுக்கு தானம் செய்யவதுமே

ஆனால் அப்படியான உண்மையான பார்பனர்களை இன்று காண்பது பகீரத பிரயதனாமாக உள்ளது ( மிகவும் அரிது)

பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணிய பலனாகத்தான் ஒருவன் உஞ்சவிருத்தி பிராமணனாக உருவாக முடியும் என்கின்றனர் பூர்வர்கள்

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளுள் ஒருவரான ஶ்ரீ தியாகராஜ சுவாமிகள் உஞ்சவிருத்தி செய்தேதான் தன் வாழ்வை பக்திபூர்வமாக நடத்தினார்

உஞ்சவிருத்தி பிராமணர்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால் அவர்கள்

தினமும் பிரம்மமுகூர்த்தத்தில் தூக்கம் விழித்து நீராடி சந்தியாவந்தனம் அக்னிஹோத்ரம் முதலிய நித்யகர்மங்களை செய்வர் பின்னர் திருவாராதனம் முடித்து உஞ்சவிருத்தி செய்ய செல்வர்

மதியம் இல்லம் திரும்பி கிடைத்த பொருட்களை கொண்டு தளிகை செய்து இறைவனுக்கு கண்டருள செய்து பின் தாங்கள் அந்த பிராசாத்த்தை ஸ்வீகரிப்பர்

ஏகாதசி தினம் என்றால் உஞ்சவிருத்தி செய்ய போகாமல் அன்றயதினம் முழு பட்டினி இருப்பார்

அதிகமாக எப்பொருளையும் இல்லத்தில் சேர்க்க மாட்டார்கள்

தங்களுக்கென சொந்தமாக ஒரு கையளவு இடம் கூட வைத்துக்கொள்ள மாட்டார்கள்

தர்ம சிந்தனையுடன் தங்களுக்கு பொருள் தானியம் தர்மமாக தருபவர்கள் உள்ள ஊரில் தங்கள் ஆயுள் காலம் இருக்கும்வரை வசிப்பர்

பணமோ பொருளோ யாரிடமும் யாசகம் பெறமாட்டார்

அதாவது பொருள் பணம் ஈட்டும் நோக்குடன் மட்டும் எச்செயலையும் செய்ய மாட்டார்

தாங்கள் வாழும் வாழ்க்கை இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்

நம் நண்பரின் மகன் போன்ற வயதுடைய இளைஞர்கள்

உஞ்சவ்ருத்தி என்றால் தற்காலத்தில் பிச்சை எடுப்பது வீடு வீடாகப் போய்த் தான்ய பிக்ஷை வாங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இம்மாதிரி தெருத் தெருவாகப் போய் அக்ஷதை வாங்குவதை உஞ்சவ்ருத்தி பஜனை என்றுகூட பஜனை ஸம்ப்ரதாயத்தில் சொல்கிற ஒரு பழக்கம் வந்துவிட்டது

ஆனால் ஆதி காலத்தில் நம் தர்ம சாஸ்திரங்களின்படி பார்த்தால் உஞ்சவ்ருத்தி என்பதற்கு அர்த்தமே வேற

சாஸ்த்ரப்படி அறுவடை முடித்து களத்தில் நெல்லடித்து சொந்தக்காரன் அந்த தான்யத்தைக் இல்லத்துக்குொண்டு போகிறபோது அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல் கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிட வேண்டும்

இதைத்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்ட பகவானுக்கு கண்டருளபண்ண பிராம்மணர்கள் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்

உஞ்சம் என்றால் சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது என்றே அர்த்தம்

இப்படிபிராமணர்கள் தங்கள் களத்தில்/ வயலில் வந்து சிதறிய தானியங்களை பொறுக்குவதால் தங்களது வயலில் அடுத்தமுறை விதைக்கப்படும் தானியங்களின் விளைச்சல் அதிகமாகும் விருத்தியாகும் என நம்பினர்

அதேபோல் தெருவில் பகவத் நாமாவை பஜனை செய்த படியே பிட்சை என கேளாமல் செல்லும் பிராமணருக்கு தங்கள் வீட்டில் உள்ள தானியங்களில் நல்லவற்றை (உஞ்சமாக) பொறுக்கி தானமாக கொடுத்தால் தம் வீடுகளில் தானியங்கள் வரத்து குறைவில்லாமல் விருத்தியாகும் என இல்லத்தரசிகள் நம்பினர் எனவே தானம் செய்தனர்

அதிலும் ஒருசில பிராமணர்கள் எல்லா வீடுகளிலும் கொடுப்பதை தானமாக பெறாமல் நல்வர்களாக நேர்மையாளராக பகவத் பக்தி உள்ளவர்களாக உண்மையே பேசுபவர்களாக உள்ளவர்கள் வீடுகளை கண்டு ( உஞ்சம் – பொறுக்கி – தேர்வு செய்து) அவர்களிடம் மட்டுமே தானம் பெற்று தங்களை விருத்தி செய்துகொள்வர் அதனாலேயே அதற்க்கு உஞ்சவிருத்தி என அழைத்தனர்

உஞ்சவிருத்தி என்பது பிச்சை எடுப்பது அல்ல அது மனிதர்கள் பிராமணனாக மாறி வாழும் வாழ்க்கைமுறை

கூரேசன் அக்காலத்திலேயே பலகோடிகளுக்கு அதிபதி தன் இறுதிக்காலத்தில் அந்த செல்வங்கள் அனைத்தையும் இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டு தான் உஞ்சவிருத்தி எடுத்து வாழ்ந்தார் என்பது உண்மை நிகழ்வு

அப்படியான உஞ்சவ்ருத்தி வாழ்வில் ஒருநாள் தானம் ஏதும் கிடைக்காமல் வெறும் செம்புடன் திரும்பி வந்து அன்றய தினம் பகவானுக்கு துளசி தீர்தத்தை மட்டுமே கண்டருளசெய்து தானும் பருகி முன்இரவில் களைப்புடன் கண்துயில

அந்த ஊர் பகவானுக்கு நடைசாற்றும் முன் தளிகை கண்டருள வேண்டி மணியோசை அப்போது ஒலிக்க

கூரேசரின் இல்லாள் மனத்திற்க்குள் பகவானிடம் ஹே பகவானே உமது பக்தர் உஞ்சவ்ருத்தியில் ஒன்றும் கிட்டாமல் வெறும் நீரை பருகி களைப்பாக கண்யர தேவரீர் இப்படி வேளாவேளைக்கு கண்டருளுவது தகுமோ என கூற

பகவான் ஒரு லீலை செய்து தான் இரவு கண்டருளபண்ணிய தளிகை முழுவதையும ்மேளதாளம் முழங்க அர்சகர் மூலம் கூரேசர் வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம்

கூரேசர் மனைவியிடம் நீ பகவானிடம் என்ன கேட்டாய் என வினவ அவள் தான் பகவானிடம் மனத்தில் பிரார்த்தித்ததை கூற கூரேசன் அவளை கடிந்து கொண்டு பகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரசாத்த்தை அனைவருடனும் பகிர்ந்து ஸ்வீகரித்தாராம்

உஞ்சவ்ருத்தி என்பது இன்றய பஜனை பாடியபடியே பிட்சை எடுப்பதில்லை அது வாழும் முறை,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top