திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகமும் , திருமணம் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுயம்பு சுப்ரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கோ பூஜை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும், சயனாதிவாசம், யந்திர பிரதிஷ்டை, பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலச புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் முன்னிலையில் விழா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் வந்தவாசி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் ஸ்ரீஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெருமணம் கிராமத்தில் பழைமையான ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஸ்ரீவிநாயகா் சந்நதி, ஸ்ரீமேல்மருவத்தூா் ஆதிபராசக்தியம்மன் சந்நதி, நவக்கிரக சந்நதி, ஸ்ரீகெங்கையம்மன் சந்நதிகளும் உள்ளன. இங்கு புதிதாக ஸ்ரீஐயப்பன் சுவாமி கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, முதல் கால பூா்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2-ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீஐயப்பன் மூலவா் சந்நதி, கோயில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனா்.
விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதாம் வழங்கப்பட்டன.