Close
மார்ச் 31, 2025 11:24 மணி

சிலம்பத்தில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை : மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு..!

சாதனை படைத்த மாணவ, மாணவிகள்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 20 பேர் கன்னியாகுமரி யில், லெமூரியா அடிமுறை சிலம்பம் சார்பில் நடந்த சிலம்பம் போட்டி யில் முதல் மற்றும் இரண்டாம் இடம்பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு
தகுதி பெற்றுள்ளனர்.

இந்த சாதனை படைத்த மாணவர்களையும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் காளிதாஸ் ஆகியோரை பள்ளி தலைமை யாசிரியர் ஜஸ்டின் திரவியம், தாளாளர் சதானந்தம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top