Close
ஏப்ரல் 4, 2025 12:16 காலை

பழுதடைந்த மின் மயான விளக்கு சீரமைப்பு..!

மின் மயானத்தில் தெரு விளக்குகளை சரிசெய்யும் மின்வாரிய பணியாளர்.

சோழவந்தான்:

வாடிப்பட்டி மயானத்தில் பழுதடைந்த மின் விளக்குகள் சரி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மயானத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில், இருந்தது. இதனால் இறுதிச் சடங்குகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதனால், பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் எனவும் இறுதி சடங்குகள் செய்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

உடனடியாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் மின் மயானத்திற்கு சென்று பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக, பழுதடைந்த மின் விளக்குகள் அனைத்தும் சரி செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top