Close
நவம்பர் 23, 2024 12:53 காலை

அதானி மீது குற்றச்சாட்டு: ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல்

சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை அச்சுறுத்தி தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அந்தத் திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள் உள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஊழியர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு “265 மில்லியன் டாலர் லஞ்சம்” கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அவர் குற்றஞ்சாட்டப்பட்டதிலிருந்து, ஜோ பைடன் நிர்வாகத்தின் பங்கு குறித்து சமூக ஊடகங்கள் கலக்கமடைந்துள்ளன. மற்றவர்கள் ட்ரம்ப் மற்றும் அவரது வணிக சாம்ராஜ்யத்தின் பின்னணியில் அதானியின் பொது ஆதரவு ஒரு காரணியாக இருந்ததை நெட்டிசன்களில் ஒரு பகுதியினர் சுட்டிக்காட்டினர்

அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி இது என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

கவுதம் அதானி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், இந்திய அரசு வழிக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கையை அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக கட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு கவுதம் அதானி எக்ஸ் தளத்தில் வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தார். இதுவும் அமெரிக்க ஆளும் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்புட்னிக் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ட்ரம்பை ஆதரித்ததற்காக அதானிக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்! முந்தைய உக்ரைன் ஏவுகணை நெருக்கடி மற்றும் இப்போது இது, டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தை குழப்பமானதாக மாற்ற ஜனநாயகக் கட்சியினர் எல்லாவற்றையும் செய்கிறார்கள்” என்று ஒரு புவிசார் அரசியல் ஆர்வலர் X இல் எழுதினார்.

“அதானி டிரம்பை ஆமோதித்தார், அவர்கள் இப்போது அவரை வீழ்த்துகிறார்கள். என்று மற்றொருவர் கூறினார்

“ஜனவரியில் வெளிவருவதற்குள் கமலாவும் அவரது கும்பலும் அதானிக்கு எதிராகப் போராடுவது போல் தெரிகிறது. டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஒரே இந்திய தொழிலதிபர் அதானி ” என்று மற்றொருவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கவும், உலக அரங்கில் வலிமையான போட்டி குரலாக இந்தியா ஒலிப்பதை முடிவு கட்டவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி மீது குற்றச்சாட்டு எழுப்பி இந்திய பங்குச் சந்தையை சரியச் செய்வது, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top