நாமக்கல், நவ. 24-
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், 100 இடங்களில் சிறப்பாக கொண்டாடுவது என மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியி ஸ்டாலின் பிறந்த நாளை, கிழக்கு மாவட்டம் முழுவதும், 100 இடங்களில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்ப்பட்டது.
மேலும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள கட்சி கொடிகம்பங்களில், கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல், கழக மூத்த முன்னோடிகள் 25 பேருக்கு பொற்கிழி, வேட்டி, சேலை வழங்குதல்,
குறைந்தது 25 முதல் 50 மரங்கன்றுகளை நடவு செய்தல், அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கு பால் பிரட் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாநகரில், மாநகர திமுகவுக்காக புதிய கட்டிடம் கட்டுவதற்காக, நாமக்கல் கோட்டை திருப்பாக்குளத் தெருவில் உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்வது என்பவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் முனவர் ஜான், நன்னியூர் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் பூபதி, மேற்கு, தெற்கு மாநகர செயாலாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.