Close
நவம்பர் 24, 2024 11:12 காலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் தலைமையில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலையை அடுத்த வேளையாம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் பேசியதாவது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேளையாம்பாக்கம் ஊராட்சியில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

கிராம சபை என்பது அடிப்படையில் மக்கள் சென்று அதிகாரிகளை பார்ப்பதை விட மாவட்ட ஆட்சியர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து மக்களை பார்ப்பதே ஆகும். அரசு மற்றும் தனிநபர் பொருளாதார வேண்டும் என்று தமிழக முதல்வர் கருதுகிறார். நாகரீகம் பண்பாடு உயர வேண்டும். இந்தியாவின் உயிர் கிராம ஊராட்சியில் தான் உள்ளது. இதை தான் திராவிடம் ஆனால் ஆட்சி வலியுறுத்துகிறது.

1947 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மதராஸ் பஞ்சாயத்து சட்டம் என 1958 இல் உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர் 1994 இல் பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 1996 இல் தமிழக முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார். ஜனவரி 26 மே ஒன்றாம் தேதி ஆகஸ்ட் 15 அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்த அறிவுறுத்தினார்.

தற்போது தமிழக முதல்வர் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் வேளையாம்பாக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் பக்க கால்வாய் சுகாதாரம் குடிநீர் உட்பட 90 பணிகள் ரூபாய் 2. 25 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கிராம மக்கள் முருகம்பாடி மற்றும் பழையனூர் சென்று பஸ் ஏறும் நிலை இருந்தது 1985இல் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த வேலையாம் பாக்கத்திற்கு பஸ் விடப்பட்டது.

தேர்தல் வேளையில் தாயைப் போல அரவணைக்கும் வேலையம்பாக்கம் மக்கள் என்றால் மிகை ஆகாது.

கிராம மக்கள் பலா் எங்கள் பகுதிக்கு பக்கக் கால்வாய் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். கிராமங்களில் சாலையோரம் பக்கக் கால்வாய்களை கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாலையின் இருபுறமும் பக்கக் கால்வாய்களை கட்டிவிட்டால் போக்குவரத்துக்கு இடையூறாகி விடும்.

இதேபோல, கிராமங்களில் கட்டப்படும் சமுதாயக் கூடங்களும் போதிய பலன் தருவதில்லை. சமுதாயக் கூடங்களில் சிறு, சிறு நிகழ்ச்சிகளை நடத்தினால் கூட அமா்ந்து சாப்பிட போதிய இடம் இருப்பதில்லை. வேளையாம்பாக்கம் ஊராட்சி மட்டுமின்றி சுற்றியுள்ள 4 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திருமணம் நடத்துவதற்காக தொலைவில் உள்ள திருவண்ணாமலை அல்லது மணலூா்பேட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 4 ஊராட்சிகளுக்கும் மையப் பகுதியாக உள்ள பழையனூரில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 6 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்: கூட்டத்தில், நூறு நாள் திட்டத்தின் கீழ் ரூ.6.77 லட்சத்தில் சிறிய பாலம் கட்டுவதற்கான ஆணை, உட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு உட்டச்சத்து பெட்டகங்கள், 3 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 4 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணைகள், 3 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top