திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் நடத்தும் 21 வது தமிழ்நாடு சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்கத் தலைவர் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் சாயர் அரவிந்த் குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பொது பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளின் அணி வகுப்பு மரியாதையிணை ஏற்று,போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன், மூத்தோர் தடகள சங்க துணைத் தலைவர் கார்த்தி வேல்மாறன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா, ஹேண்ட்பால் சங்க சேர்மன் பஷீர் அகமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 35க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த 960 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.