Close
நவம்பர் 24, 2024 10:00 காலை

ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!

ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப்பணியை, அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அருகில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார்.

நாமக்கல் :
ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய பஸ் ஸ்டாண்டிற்கு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நகரின் மத்திய பகுதியில் பஸ் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. பஸ் நிலையத்திற்குள் வெளியூர் பஸ்கள் அதிக அளவில் வந்து செல்வதால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் ராசிபுரம் நகருக்கு அருகில், புறநகர் பஸ் நிலையம் அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி அணைப்பாளையத்தல் தனியார் ஒருவர் மூலம் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தானமாக பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு ரூ. 10.38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையொடி, புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நகராட்சி தலைவர் கவிதாசங்கர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top