Close
ஏப்ரல் 3, 2025 11:39 மணி

அம்பலத்தடி ஊராட்சியில் நாட்டுநல பணித் திட்ட முகாம்..!

எம்.எல்.டபுள்யூ ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

அலங்காநல்லூர் :

மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவி முருகன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, கிராம பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.

மாணவர்கள் ஒரு வாரம் இக்கிராமத்தில் தங்கி இப்பணியை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியர் நாகசுப்பிரமணியன், நாட்டு நல பணித் திட்ட அலுவலர் லோககுமர குருதாஸ்,
உதவி திட்ட அலுவலர் நவகாளிஸ், மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top