நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்டு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்வசாடி மையங்களிலும் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், சூரியக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சங்ககிரி மேற்கு, சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்த முகாமை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் தேர்தல் கமிஷன்வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும், 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கும் பணி மற்றும் பட்டியலில் போட்டோ, குடியிருப்பு முகவரி திருத்தம் செய்தல், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற உரிய விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருவதையும் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உணவுக் கூடம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.