Close
நவம்பர் 25, 2024 5:56 மணி

யுபிவிசி ஜன்னல்-கதவுகள் தயாரிப்பில் கார்பென்டர் பயில்வோருக்கு தனிப்பிரிவு..!

மதுரைல நடந்த யுபிவிசி ஜன்னல்- கதவுகள் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

ஜன்னல் கதவுகள் தயாரிப்போர் சங்கக் கூட்டம்

மதுரை:

யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என, தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய- மாநில அரசை வலியுறுத்தி மதுரையில் நடந்த யுபிவிசி கதவு- ஜன்னல் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் ஓட்டலில் யுபிவிசி ஜன்னல்- கதவுகள் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் அமிர்தானந்த் தலைமையில் நடைப்பெற்றது.

செயலாளர் சரவணன், பொருளாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை
யில் நடத்தி கூட்டத்தில், தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள், இளைஞர்கள் ஏராளமாக வேலை இன்றி உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் பிளாஸ்டிக் தொழில் நுட்பத்துறையில் கதவு ஜன்னல் உற்பத்தி குறித்து பயில தனியாக ஒரு பாடப் பிரிவு ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை வைப்பது,

இயற்கைக்கு மாற்றாக மர அழிவை தடுக்கும் விதமாக மனிதர்களின் பசிக்காக மரத்தினை பலியாக்கும் சூழலுக்கு மாற்றாக தான் இந்த தொழில் இயங்கி வருகிறது .
ஒரு வீட்டிற்கு யுபிவிசி ஜன்னல் – கதவுகள் மூலமாக ஒரு மரத்தின் அழிவு தடுக்கப்
படுகிறது.

ஆக ஒரு வீடு ஒரு மரத்தினை காப்பாற்றுகிறது. ஒரு வருடத்திற்கு கோடிக்கணக்கில் மரங்கள் தங்கள் தொழில் நுட்பம் மூலமாக காப்பாற்றப்பட்டு வருகிறது. இது செயற்கை தான் இதனால் இயற்கைக்கு எந்த பாதிப்பும் கிடையாது அழிவும் கிடையாது.

யுபிவிசி தொழிலின் அடிப்படையே மரங்களை பாதுகாப்பது தான். மரத்தின் அழிவுகளை தடுத்து அதற்கு மாற்றாக தான் பிளாஸ்டிக் ஜன்னல்கள்- கதவுகள் தயாரிக்கப்படுகின்றன. மரத்தை பாதுகாப்பதில் இந்த தொழில் நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது உள்ளிட்டவை கள் குறித்து ஆலோசித்தனர்.

யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என , தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும். யுபிவிசி ஜன்னல்- கதவுகளுக்கு 18 சதவீதம் வரி கட்டுகிறோம் வரி சதவீதத்தை குறைத்து 5% ஆக குறைத்திட வேண்டும்.
இந்த தொழிலை வலுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் இணைந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் .

யுபிவிசி ஜன்னல்- கதவுகள் விற்பனை செய்யும் கட்டிடங்கள் பெரும்பாலும் வாடகை கட்டடங்களில் உள்ளது. அவற்ற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்வு அதிகரித்துள்ளது. தற்போது, உள்ள வரி சதவீத உயர்வால் நாங்கள் மேலும் பாதிப்பு அடைகிறோம். எங்களது வாழ்வாதாரம் கருதி அரசு இதனை ரத்து செய்ய வேண்டும்.

மின்சார கட்டண குறைக்கப்பட வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு வங்கிகளில் இருந்து கடன்கள் பெற்றுள்ளோம். எங்களது வங்கி கடன்களை தள்ளுபடி செய்து கொடுக்க வேண்டும் அல்லது மானியம் ஆவது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது‌.

இந்த கூட்டத்தில், டிஎன் உட்பா உறுப்பினர்கள் அருப்புக்கோட்டை, திருச்சி, கோவை, கரூர் என தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top