Close
நவம்பர் 26, 2024 7:48 காலை

டிசம்பர் 1ம் தேதி யோகி ராம்சுரத்குமாா் ஜெயந்தி விழா..!

பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 106-வது ஜெயந்தி விழா டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது .

மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலை, எத்தனையோ மகான்களை இந்த உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. அப்படி திருவண்ணாமலை உணர்த்தி உலகுக்கு அருளிய  மகான்  ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், பகவான் ஸ்ரீரமணர் எனப் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை. காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி பக்தர்களுக்கு வழிகாட்டிய சித்த புருஷர் விசிறி சாமியார் என்றும் காசி மகான் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார்.

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 106 ஆவது ஜெயந்தி விழா திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவம்பர் 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

30 ஆம் தேதி

காலை சிறப்பு ஹோமங்கள்,  10 மணிக்கு யோகி ராம் சூரத் குமார் வலியுறுத்தியது “இல்லற வாழ்வின் மேம்பாடா அல்லது இறை வாழ்வின் மேம்பாடா” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம், மாலை திருவாசக மாமணி ஸ்ரீ சற்குருநாத ஓதுவார் குழுவினரின் சிறப்பு தேவார இன்னிசை மற்றும் ஸ்ரீ அஸ்வின் சித்தார்த் குழுவினரின் நாடகம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

டிசம்பர் 1ம் தேதி

ஆராதனை தினமான டிசம்பர் ஒன்றாம் தேதி காலை ருத்ரா ஹோமம், சிறப்பு அபிஷேகம்,  பக்தர்களின் பாக அனுபவங்கள், நிகழ்ச்சி அன்னதானம் , இரவு பகவானின் உற்சவமூர்த்தி பிரதான் மந்திர் உள்ளே உலா வருதல் என ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரமம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top