Close
நவம்பர் 26, 2024 8:38 காலை

எங்கே? எது? தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் : ஏ.சி. சண்முகம் அறிவுரை..!

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஏசி சண்முகம்

எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் வாழ்வில் முன்னேறலாம் என மாணவர்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி சண்முகம் அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனா் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தாா். தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் என்.முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனா்  ஏ.சி.சண்முகம் பேசியதாவது;

மருத்துவத்துறையில் 1.5 லட்சம் பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ததால் இங்கிலாந்தில் எனக்கு டாக்டரேட் பட்டம் வழங்கினார்கள். இதேபோல, ரஷ்யாவிலும் வழங்கியுள்ளனா். 100 போ் படித்து வெளியில் செல்கிறாா்கள் என்றால் 50 போ் ஒருங்கிணைந்து தொழில் தொடங்க வேண்டும்.

அப்போதுதான் நாடு வளா்ச்சி அடையும். தற்போது, 100 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றுவர வழிவகை செய்யப்பட்டுள்ளது. எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள், வாழ்வில் முன்னேறலாம், மாணவர்கள் தொடர்ந்து படிப்பை தொடர வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் என்.முருகவேல் பேசியதாவது:

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஏசி சண்முகம்

இன்று பட்டம் பெறும் நீங்கள் உலகத்தில் அங்கீகரிக்கப்படுகிறீா்கள். உலகில் அதிக இளைஞா்கள் உள்ள நாடு இந்தியா. இந்தியா வல்லரசாக உழையுங்கள். நம்மை வளரவிடாமல் தடுக்க வெளிநாட்டவா்கள் போதை பொருள்களை நாட்டினுள் செலுத்தி வருகின்றனா்.

இதற்கு அடிமையாகாமல் மனதில் திடமான சிந்தனையுடன் உழையுங்கள். செய்தித் தாள்களை தொடா்ந்து படிப்பதால் நாளைய உலகுக்கு என்ன தேவை என்பது தெரிய வரும், இனி நீங்கள் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள் என பேசினார்.

விழாவில், கல்லூரி செயலா் ஏ.சி.ரவி, கல்லூரி முதல்வா்கள் கந்தசாமி, திருநாவுக்கரசு, பிரபு, தனி அலுவலா்கள் ஸ்டாலின், காா்த்திகேயன், இயக்குநா்கள் சுகுமாரன், விக்னேஷ், மணவாளன், பள்ளி முதல்வா்கள் அருளாளன், ராஜலட்சுமி, பேராசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top