அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேடு நாயுடு மகாலில் பாலமேடு வட்டாரக் களஞ்சியம் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு தானம் அறக்கட்டளை கிராமப்புற மண்டல சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக்நாயர், தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களை கண் பரிசோதனை செய்தனர்.
இதில் பாலமேடு வட்டாரக் களஞ்சியம் ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம், கண் பரிசோதனைக்கான முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் 263 பேர் கலந்து கொண்டு கண் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததுடன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்கள் மொத்தம் 58 பேர், கண் கண்ணாடி பெற்றவர்கள் 30 பேர், மேல் சிகிச்சைக்காக 5 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வட்டார பணியாளர்கள், தலைவிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கலந்து கொண்டனர்.