Close
நவம்பர் 27, 2024 7:25 காலை

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி 125 வது ஆண்டு விழா

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 125 வது ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தெய்வநீதி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹூ பட் தனசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றுகையில்

125 ஆண்டு காலமாக பல்வேறு அறிஞர்களையும் மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் ஆசிரியர்களையும் வழக்கறிஞர்களையும் ஆளுநர்களையும் அமைச்சர்களையும் உருவாக்கி பல்வேறு பெருமைகளை தனக்குள் உள்ளடக்கியது இப்பள்ளி.  இப்பள்ளிக்கு பல்வேறு பெருமைகள் உண்டு. வட ஆற்காடு மாவட்டத்தின் அடையாளம் காட்டப்படுபவர்கள் படித்த பள்ளியாகும்.

தமிழ்நாடு முதல்வர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்தியாவில் உள்ள  மாநிலங்களில் பெண்கள் அதிகம் படித்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார் என அமைச்சர் பேசினார்.

முதலமைச்சர் வாழ்த்து

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி 125 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தியை மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் வாசித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் வேல்மாறன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள்,  முன்னாள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது தொடர்ந்து இலக்கிய மன்ற நிறைவு விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன பணி நிறைவு பாராட்டு விழா கிறிஸ்மஸ் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவும் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top