திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விதிமுறைகளை விளக்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு போக்குவரத்து நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் கம்யூனிஸ்ட் ஓட்டுநர்கள் சங்கம் சரவணன் அண்ணா தொழிற்சங்க ஓட்டுனர் அணி அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
காவல் உதவி கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பேசுகையில் திருவண்ணாமலை நகரில் 2000 ஆட்டோக்களுக்கு மேல் இயங்கி வருகிறது இவர்களை அடையாளம் காணுவது மிகவும் சிரமமாக உள்ளது.
திருவண்ணாமலை நகரில் ஓடும் ஆட்டோக்களை விட வெளியூர் ஆட்டோக்கள் அதிகமாக உள்ளது. இதனால் யார் தவறு செய்கிறார்கள் என்று கண்டு கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.
இந்த தவறுகள் நடக்காமல் இருக்க காவல்துறை மூலம் ஆட்டோக்களுக்கு டிரைவர் பெயர், முகவரி, ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புக், போட்டோ போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கியூ ஆர் கோடு வசதியுடன் வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டை இல்லாமல் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டினால் சம்பந்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கூடாது. அதிக நபர்களை ஆட்டோக்களில் ஏற்றி செல்ல கூடாது. முறையான ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்க கூடாது. தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்.
இதற்கு அனைத்து கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் மட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள், க்யூ ஆர் கோடு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.