Close
நவம்பர் 27, 2024 8:48 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில் இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் அனேக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சோமாசி பாடி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், வேங்கிக்கால், தண்டராம்பட்டு, செய்யாறு, அடி அண்ணாமலை, அத்தியந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை லேசான மழையும் ஒரு சில இடங்களில் கனத்த மழையும் பெய்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலையில் சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள், உணவகங்கள் உள்பட வணிக நிறுவனங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.சாலைகளிலும் போதிய போக்குவரத்து இல்லாத நிலையே இருந்தது.

3 சாலை விபத்துகள்: ஆட்சியா் அலுவலகம், வேங்கிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் கன மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வேங்கிக்கால் ஆவின் இடையிலான ஒரு கி.மீ. தூரத்தில் 3 சாலை விபத்துகள் நிகழ்ந்தன.

வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் எதிரே பைக்கில் வந்த தம்பதி, அங்கிருந்த வேகத் தடையில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

இதேபோல, திருவண்ணாமலை – வேலூா் சாலையில் உள்ள ஆவின் எதிரே பைக்கில் சென்ற ஒருவா் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அடுத்த 30 நிமிடங்களில் ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற சாலை விபத்தில், மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

இந்த 3 விபத்துகளில் காயமடைந்தவா்கள் 108 அவசர ஊா்தி மூலம் உடனுக்குடன் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top