திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும், கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடு கட்டும் திட்டம்,
மற்றும் பிரதம மந்திரி, ஜன்மண் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் ,பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் ,தூய்மை பாரத இயக்கத்திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் ,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ,நமக்கு நாமே திட்டம்,பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் உருவாக்கும் சாதனை நிகழ்வின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராம ஊராட்சி அளவில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தினமும் குளோரிநேஷன் செய்வதுடன் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்யவும் அதனை உறுதி செய்யுமாறு ஆட்சியர் அறிவுறுத்தி பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள், அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.