மதுரை:
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வின் போது பள்ளிக்கூடம் அருகில் தடை
செய்யப்பட்ட பகுதியில் சிகரெட் விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, நடவடிக்கை எடுத்தார். மதுரை தெற்கு வட்டத்திற்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வின் போது பள்ளிக்கூடம் அருகில் தடை செய்யப்பட்ட பகுதியில் சிகரெட் விற்பனை செய்த கடையில் சிகரெட்டுகளை COTPA சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த பகுதியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆய்வு செய்த போது, தமிழக அரசால் தடை செய்ய பட்ட பாலீத்தீன் பை வைத்திருந்த
கடையின் உரிமையாளருக்கு ரூபாய் 2000/- அபராதமும், சுகாதார குறைபாடு உள்ள ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூபாய் 1000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அப்பகுதிகளில் நடத்தப்படும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, உணவு பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தெரிவித்ததாவது:-
சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. உங்கள் கடைகளை தேடி வருவோர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை தரமானதாகவும், கலப்
படமில்லாததாகவும், வழங்க வேண்டும்.
மேலும், உங்கள் கடைகளை தேடி வருபவர்களை தங்கள் வீட்டுல் உள்ள குழந்தைகள் என்ற எண்ணத்தோடு அணுகினால் மட்டுமே நீங்கள் தரமான உணவுப் பொருட்களை வழங்க முடியும். கடைகளில் வாங்கி விற்கப்படும் பொருட்களையும் தரமான பொருளாக வாங்கி விற்க வேண்டும்.
தங்கள் கடைகளின் மூலம் தரமான உணவுப் பொருட்களை விற்பதால் கடைகளில் இலாபம் குறைவாக இருந்தாலும் தரமான உணவிற்காகவே தங்கள் கடைகளை அதிகமானோர் நாடி வரும்போது அதிக இலாபத்தைப் பெற முடியும்.
மேலும், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்று கடைகளை நடத்த வேண்டும். பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடைகளை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானதாகும் என , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, உணவு பாதுகாப்பு
சட்ட விழிப்புணர்வு இலவச பயிற்சி முகாமில் (FOSTAC) கலந்து கொண்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, நியமன் அலுவலர் (உணவுப்பாதுகாப்புத் துறை) மரு.ஜெயராம பாண்டியன்,உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.