காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் ,தீயணைப்பு துறையினர் என ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3359 நபர்களுக்கு அதில் 1000 நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினர்
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என 39 நபர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மாவட்ட காவல் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொது இடங்களில் 4000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகம் அருகே போதைப் பொருட்கள் விற்பதை தடுக்கும் வகையில் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் தினந்தோறும் ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர், பொன்னேரி போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கும் பணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என கூறினார்
கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான சைபர் கிரைம் குற்றங்களில் 10 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் .
போதைப் பொருட்கள் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகனங்களில் தணிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்