Close
டிசம்பர் 4, 2024 7:08 மணி

திருவண்ணாமலையில் தேசிய நூலக வார நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் மாவட்ட நூலக ஆணைக்குழு மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் மகளிர் வாசகர் வட்டம் இணைந்து தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன் , மாநகராட்சி உறுப்பினர் கலைவாணி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் வள்ளி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் 2024 ஆம் ஆண்டின் டாக்டர் அரங்கநாதன் விருது சிறந்த மாவட்டம் மைய நூலக விருது, மற்றும் நூலக ஆர்வலர் விருது என மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் அரங்கநாதன் விருதினை நாரியமங்கலம் கிளை நூலக நூலகர் பானு மற்றும் மாவட்டம் தோறும் சிறப்பாக செயல்பட்டு வரும் நூலக வாசகர் வட்டத்திற்கான நூலக ஆர்வலர் விருதினை வடமாதிமங்கலம் கிளை நூலக வாசகர் வட்ட நூலக ஆர்வலர் கலைவாணி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி பேசுகையில்;

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5000 குழந்தைகள் பல்லி செல்லாமல் உள்ளனர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோரது உத்தரவுக்கிணங்க மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையால் இன்றைக்கு பள்ளி செல்லா இடை நின்ற 1400 மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நூலகங்கள் தான் தங்களது வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கிறது. நூலகங்களில் ஏராளமான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும், அதிகமாக நூலகங்களை பயன்படுத்துங்கள் என ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருக்குறள் மைய நிர்வாகி பாவலர் குப்பன் விழா குறித்து கவிதை வாசித்தார்.
இவ்விழாவில் வாசகர் வட்ட தலைவர் வாசுதேவன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் மனோன்மணி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மைய நூலக வாசக வட்ட நிர்வாகிகள் ,வாசகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் நூலகர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top