Close
டிசம்பர் 5, 2024 2:23 காலை

தீபத் திருவிழாவை முன்னிட்டு மின் ஒளியில் ஜொலித்த அண்ணாமலையார் திருக்கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன.

நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலையாக எழுந்து நிற்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விசேஷம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாளை 1ம் தேதி எல்லை தெய்வ வழிபாடு தொடங்குகிறது. நாளை முதல் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. முன்னிட்டு திருக்கோயில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன.

திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தற்போது திருவண்ணாமலையில் கன மழை பெய்து வருகிறது மழையிலும் ஏராளமான பக்தர்கள் மின்னலங்காரத்தை கண்டு ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top