Close
டிசம்பர் 5, 2024 2:36 காலை

தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுகூட்டம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் தங்களது துறைகளின் தீபத் திருவிழா பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

காவல்துறை சார்பாக 14000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். நகரத்தில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 50 இடங்களில் காவல் உதவி மையங்கள் மாநகரின் முக்கிய இடங்களில் 700 சிசிடிவிகள் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

போக்குவரத்து துறை சார்பாக ஒன்பது முக்கிய சாலைகளில் 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 120 கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும்  3408 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ரயில்வே துறை சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்டோ கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் கூடுதலாக பயணிகளிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்.
கண்காணிப்பு பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் 15 போக்குவரத்து துறை அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் தீயணைப்பு துறை சார்பாக 23 தீயணைப்பு வண்டிகள் 600 பணியாளர்கள் பணியமத்தப்படுவார்கள்.
குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கிரிவலப் பாதையை தூய்மை செய்வதற்கு தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நெடுஞ்சாலை துறை சார்பாக கிரிவலப் பாதை 8 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உணவு பாதுகாப்புத்துறை மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக வழங்கப்படுகிறதா என்பதை மூன்று மாவட்ட அலுவலர்கள் 28 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 350 தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்களை பணிய அமர்த்தி கண்காணிக்கப்படும்.
தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பாக திருவண்ணாமலை நகர முழுவதும் தீபத் திருவிழா நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் ஜோதி, மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top