Close
ஏப்ரல் 4, 2025 10:36 மணி

இன்று முதல் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..!

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் -கோப்பு படம்

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 16 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,964.50 ரூபாயாக இருந்த நிலையில், இன்று முதல் அதன் விலை ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.61.50 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அதே விலையே தொடர்கிறது. அப்படா.. பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top