Close
ஏப்ரல் 2, 2025 1:38 காலை

மதுரை, மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 4 வது விளையாட்டு விழா..!

மகிழ்ச்சி மழலையர் பள்ளி விளையாட்டுவிழாவில் பங்கேற்ற மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்.

மதுரை :

மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகர் அருகே உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, 4வது ஸ்போர்ட்ஸ் டே விழா கொண்டாடப்பட்டது.

செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார்.பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி, முன்னிலை வைத்தார். கெவின் குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.தலைமை விருந்தினர்களாக நாராயணன், பாலமுருகன் மற்றும் ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக மைக்கேல் விஜயன் அல்போன்ஸ், முத்துப்பாண்டி, சூர்யா, சக்தி, செல்வராஜ் மற்றும் ஓ.எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில், நாராயணன் தலைமை உரையாற்றினார்.

தற்காப்பு கலைகளை மகிழ்ச்சி அகடாமி மாணவர்கள் செய்து காட்டினர். அவற்றின் பயன்களை கெவின் குமார் விளக்கினார்.இறுதியில், அக்ஷிதா நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை, ஹரிஷ், ஜெயலட்சுமி, ப்ரீத்தி, சுபலட்சுமி, பவித்ரா, அமலா, பூமிநாதன், முத்துக்குமார், வினோத் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top