Close
ஜனவரி 22, 2025 8:08 மணி

சென்னை திரும்பிய அண்ணாமலை: செந்தில் பாலாஜிக்கு எதிராக சுருக் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை திரும்பிய அண்ணாமலை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின்னர் சர்வதேச அரசியல்  குறித்து படிப்பதற்காக லண்டனிற்கு சென்றார். அங்குள்ள ஹார்டுவேர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 மாத காலம் கல்வி பயின்ற அண்ணாமலை இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லண்டன் ஹார்டுவேர்ஸ் பல்கலைக்கழகம் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தில் நான் 3 மாத கல்வி பயில்வதற்காக ஒரு வாய்ப்பு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் சர்வதேச ஆளுமைகள் எல்லாம் அங்கு பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த 3 மாத காலத்தில் இந்திய அளவிலும் தமிழகத்திலும் பெரிய மாற்றங்கள் நடந்து உள்ளன. மகராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து உள்ளார். அவர் மிகப்பெரிய மாநாடு நடத்தி  மக்களுக்காக பாடுபட போவதாக கூறி இருக்கிறார். மக்களுக்காக பாடுபடுவேன் என்ற அவரது எண்ணத்தை வரவேற்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனார். இப்போது அவர் துணை முதல் அமைச்சராகி இருக்கிறார். மிக மிக வேகமாக அவர் வளர்ந்து உள்ளார். இதற்கு காரணம் அவர் முதல் அமைச்சரின் மகன் என்ற ஒரே காரணம் தான். திமுக குடும்ப கட்சி என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.

மேலும் ஊழல் வழக்கில் சிறை சென்று வந்துள்ள செந்தில் பாலாஜியை ஒரு நிரபராதியை கொண்டாடுவதைப் போல முதலமைச்சர் கொண்டாடுகிறார். இதையேதான் ஆம் ஆத்மி கட்சியும் செய்து வருகிறது. ஊழல் மலிந்துள்ள திராவிட முன்னேற்ற கழகம் ஜாமீனில் வெளிய வந்துள்ள மனிதரை காந்தியாக கொண்டாடுவது தமிழகத்தில் புதிதல்ல. தமிழக மக்கள் எல்லாவற்றியும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர்களின் பதவி ஏற்பு விழாவைக்கூட செந்தில் பாலாஜிக்காக நிறுத்தி வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

நான் வெளிநாடு சென்றிருந்த கால கட்டத்தில் தமிழகத்தில் எச்.ராஜா கட்சியை திறம்பட நடத்தி இருக்கிறார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top