Close
டிசம்பர் 5, 2024 2:29 காலை

விழுப்புரத்தில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி.

பலத்த மழை பெய்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பெஞ்சல் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து விட்டாலும் மழை இன்னும் குறைந்த பாடில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அம்மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2ம் தேதி) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி அறிவித்து உள்ளார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக செய்வதற்காக செந்தில் பாலாஜி உள்பட 3 அமைச்சர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top