Close
டிசம்பர் 5, 2024 2:27 காலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை சேதம் குறித்து ஆட்சியர் கலைச்செல்வி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர் உத்திரமேரூர் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 16 கால்நடைகள் 14 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் தற்போது மாலை 6:00 மணி வரை உத்திரமேரூரில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர், காஞ்சிபுரத்தில் 170 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 137 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 146 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 109 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் பகுதியில் 136 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு நாட்களில் 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் , 23 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் 14 மின்கம்பங்கள் மற்றும் 225 ஹெக்டேர் விளைநிலங்கள் மழையால் சேதம் அடைந்துள்ளது.

மேலும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நீர் தேங்கியுள்ளதாக வந்த 104 புகார்களில் 84 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது. , 34 மரங்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டது, 23 நிவாரண முகாம்களில் தற்போது வரை 564 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உணவு மருத்துவ வசதி என அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top