Close
டிசம்பர் 5, 2024 2:09 காலை

ஜோதி முருகன் திருக்கோயிலில் பால்குட உற்சவம்..! காவடி எடுத்து நேர்த்திக்கடன்..!

அலங்காநல்லூர் ஜோதி முருகன் கோயிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ வரம்தரும் ஜோதி முருகன் திருக்கோயில் பால்குட உற்சவ விழா – காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் குலாலர்கள் ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் ஸ்ரீ வரம் தரும் ஜோதி முருகன் திருக்கோயில் கார்த்திகை மாத பால்குட உற்சவ விழா நடைபெற்றது.

இதில் அதிகாலையில் கணபதி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செல்லாயி அம்மன் சன்னதியிலிருந்து பால்குடம், காவடி, வேல் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலையில் மாவிளக்கு ஆராதனையும், தொடர்ந்து ஜோதி முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அச்சம்பட்டி குலாலர்கள் ஜோதி முருகன் திருப்புகழ் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top