Close
டிசம்பர் 12, 2024 6:40 மணி

தீபத் திருவிழா முதல் நாள்: வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

அண்ணாமலையார்- வெள்ளி அதிகார நந்தி வாகனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று புதன்கிழமை  4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தனா். உற்சவா் சுவாமிகளை வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

நேற்று இரவு 10 மணிக்கு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி முஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்திவாகனத்தில் சண்டிகேஸ்வரரும், உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இரவு நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வழி நெடுங்கிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகளை வழிபட்டனர்.

தீபத் திருவிழாவில் இன்று..

தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை (டிச.5) காலை 9 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகா், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரா் சுவாமிகள் வீதியுலா வருகின்றனா். இரவு 10 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி கண்ணாடி விமானம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top